பிரபல இணையதள செய்தி நிறுவனமான ‘டெய்லி ஹன்ட்’ மற்றும் நீல்சென் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு குறித்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் சுமார் 54 லட்சம் மக்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆன்லைன் மூலம் சமீபத்தில் நடத்தியது.
அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெளியிட்டிருக்கும் முடிவுகளின்படி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு ஆட்சி தொடர்பாக 63 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், அவர் மீண்டும் நாட்டின் பிரதமராக 50 சதவீதம் மக்கள் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமரானால் தங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று இவர்களில் பலர் தெரிவித்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த கருத்துக் கணிப்பு பொய்யான தகவல் என்றும் இது ஒரு வீண்வேலை என்றும் கூறி இதனை நிராகரித்துள்ளது.