முப்படைகளின் பிரதானியை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!

முப்படைகளின் பிரதானி அடமிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கொலைச் சம்பவம் தொடர்பிலான முக்கிய குற்றவாளியை மறைத்து வைத்திருந்தமை தொடர்பிலேயே முப்படைகளின் பிரதானியை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜராக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.