சர்க்கார் படத்தின் கதை திருட்டுக்கதை என்றும் தனக்கு நியாயம் வேண்டும் என்றும் உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த் புகாரை எழுத்தாளர் சங்க தலைவராக இருக்கும் நடிகர் பாக்யராஜ் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த பாக்யராஜ் இரண்டு கதைகளும் ஒன்றுபோல் உள்ளது என்று பேட்டி அளித்தார். பின்னர் விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. இந்தநிலையில் உதவி இயக்குனருடன் சாமரம் ஏற்பட்டதால் அணைத்து விவகாரங்களும் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்தை திரை உலகமே எதிர்த்து நின்றது. சன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்தை மிகப்பெரிய போர்ஜரி நிறுவனம் என்றும், ஊழல் நிறுவனம் என்றும் திரையுலகினர் கைகோர்த்து நின்றனர்.
இன்று சர்காரில் அவர்களுடன் கை கோர்த்திருக்கும் நடிகர் விஜய், அன்றைய பொழுது 2 ஜி ஊழல் என்று சன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக பேசிவிட்டு தற்போது அந்த நிறுவனத்துக்கே கால்சீட் கொடுத்துள்ளார் என கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஒரு காலத்தில் அவரின் வித்தியாசமான கதை, வசனத்தினால் திரைப்படத்துறையின் பாதையை மாற்றிய பாக்யராஜையே மிரட்டுமளவுக்கு சென்றதை “கார்ப்பரேட் கிரிமினல் வேலையா “” “””விஜய்….. என சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.