வெஜிடபிள் உப்புமா!

தேவையானவை:

தினை அரிசி – ஒரு கப்
வெங்காயம் – 1
கேரட் – 1
குடமிளகாய் (சிறியது) – 1
பச்சைப் பட்டாணி – அரை கப்
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
• வெங்காயம், கேரட், குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
• நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.
• இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும்.
• கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.
• இந்த திணை அரிசி வெஜிடபிள் உப்புமா டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.