அவுஸ்திரேலியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான தன்னை ஈட்டுபடுத்தில்கொண்டவர் யூட் அன்ரனி இவர் நேற்று வீதியில் சென்றுகொண்டிருந்த போது கார் ஒன்றினால் மோதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் அவரை வைத்தியச்சாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் மெல்பேர்ணில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், யூட் அன்ரனி ஏற்கனவே முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுவர் இந்நிலையில் மீண்டும் படுகாயமடைந்துள்ளது அவரின் மறுவாழ்வு வேலைத்திட்டத்தில் இருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு வேலைத்திடத்தில் இருக்கும் அனைவரும் பிராத்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறிலங்கா இராணுவத்தினரின் செல் தாக்குதலில் படுகாயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் குடியேறி வாழ்ந்து வருபவர் யூட் அன்ரனி,
மேலும், இவர் தாயகம் சென்று முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்ட்டவர்களின் மறுவாழ்வுக்கான வேலைத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு சமூகசேவை செயற்பாட்டாளர் எனவும் தெரிவித்துள்ளனர்.