மைத்திரியின் அதிரடி அறிவிப்பால் நிலை தடுமாறும் ரணில்!

நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மிடம் உள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், கடந்த புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு கூட்டத்திலேயே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நிலையான அரசாங்கத்தை அமைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் ஏனைய குழுக்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் முக்கியமான சந்தர்ப்பங்களில் அரசியல்குழுவை அமைத்து தீர்மானங்களை எடுப்பதற்கான, சுதந்திர கட்சியின் யாப்பில் இரண்டு திருத்தங்களை உள்ளடக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.