இலங்கை அரசியல் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ரணில் விக்ரமசிங்க உட்பட அனைத்து உறுப்பினர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் அலரி மாளிகைக்கு வந்த வைத்தியர்கள் சிலர் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
ரணிலின், இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்கு முன்னர் அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இரத்த அழுத்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அனனைவரதும் இரத்த அழுத்த நிலை, சாதாரண நிலையை விடவும் சற்று அதிகரித்த நிலையில் காணப்பட்டுள்ளது.இறுதியாக ரணில் விக்ரமசிங்கவின் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது இரத்த அழுத்தம் சரியான மட்டத்தில் காணப்பட்டுள்ளது.
இதனை சோதனையிட்ட வைத்தியர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்றத்தில் மிகவும் பலமான கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியை, சதிப் புரட்சி மூலம் மஹிந்த தரப்பினரால் உடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் பதவியை ரணில் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.