அண்ணனின் மனைவியை, உடன்பிறந்த தம்பி இப்படியா செய்வது!.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவர் மனைவி மாதவி இருவரும் அதே பகுதியில் வசித்துவந்துள்ளனர்.

சத்யநாராயணனின் சகோதரர் ஸ்ரீனிவாஸ். இவருக்கும் திருமணமான நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக சென்றுவிட்டார் ஸ்ரீனிவாஸ்.

மனைவியை பிரிந்ததில் இருந்து, குடிக்கு அடிமையான ஸ்ரீனிவாஸ் தினமும் மது அருந்தி சைக்கோ போல் வாழ்ந்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடி போதையில் ஸ்ரீனிவாஸ் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது அவரின் அண்ணியான சத்யநாராயணனின் மனைவி மாதவி சாலை ஓரத்தில் உட்கார்ந்து பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார்.

இதையடுத்து சாலையில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவு தருவதாக கூறி அவரின் அண்ணியான மாதவியிடம், ஸ்ரீனிவாஸ் சண்டை போட்டு தகராறு செய்துள்ளார்.

போதை தலைகேறியதில் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து மாதவி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மாதவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த காவல்துறையினர், மாதவி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து ஸ்ரீனிவாஸையும் கைது செய்தார்கள்.