மீடு விவகாரத்தில் ஆண்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை!

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் மீடு ஹேஷ்டாக் மூலம் பெண்கள் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். இதையடுத்து இந்தியாவில் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா மூலம் தொடங்கிய இந்த மீடு சர்ச்சை பல நடிகைகளை வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் பேச வைத்தது.

இந்நிலையில் தமிழ் திரையுலகமே பெரும் மரியாதையை வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியதற்கு ஆதரவும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வந்தது.

பாடகி சின்மயி-யை தொடர்ந்து தென்னிந்திய திரை உலகில் தமிழ், கன்னட, மலையாள நடிகைகள், பல நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வந்ததை அடுத்து சினிமாத்துறையில் இப்படியெல்லாம் நடக்குமா என மக்கள் நினைக்க தொடங்கினர்.

இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான அமீர்கான், அக்‌ஷய் குமார் ஆகியோர், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குனர்களின் படத்தில் நடிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

தற்போது மீடு விவகாரத்தில் ஆண்களுக்கு ஆதரவாக ரஜினியின் லிங்கா படத்தில் நடித்த பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கூறுகையில் “ஆண்களை துன்புறுத்தும் மற்றும் தவறாக நடந்து கொள்ளும் பெண்களை தண்டிக்க வேண்டும் எனவும், பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும்” அவர் கூறியுள்ளார்.