16 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கணவர்… பிள்ளை பெற்றெடுத்த மனைவி!

இஸ்ரேலில் செயல்பட்டுவரும் அதிக பாதுகாப்பு நிறைந்த சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் தங்கள் உயிரணுக்களை திருட்டுத்தனமாக அனுப்பி வாரிசு உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த முறையில் ஜெருசலேமில் குடியிருக்கும் ஒரு குடும்பம் இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளனர்.

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஜபல் அல்-முக்காபேர் பகுதியில் குடியிருக்கும் சாமியா மஷாஹராவின் கணவர் கடந்த 16 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.

ஆனால் சாமியா சிறையில் இருக்கும் தமது கணவரின் உயிரணுக்களை பெற்று ஒரு மகனை பிரசவித்துள்ளார்.

சிறையில் இருக்கும் கைதிகள், பார்வையாளர்கள் அல்லது புதிதாக வெளியேறும் கைதிகள் வாயிலாக உயிரணுக்களை உரியமுறைப்படி அனுப்பி வைக்கின்றனர்.

இந்த உயிரணுக்களை IVF முறைப்படி கருவுற செய்கின்றனர். இந்த வகையில் ஜெருசலேமில் மட்டும் 7 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இஸ்ரேல் அதிகாரிகள் குறித்த விடயத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளனர். நாளின் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் குறித்த சிறையில் இருந்து உயிரணுக்களை சேதப்படுத்தாமல் கடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலில் உள்ள சிறைகளில் சுமார் 5,500 பாலஸ்தீனியர்கள் கைதிகளாக அடைபட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்த தொடர் கைது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.