விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்களவாய் கிராமத்தை சேர்ந்த பழனி மனைவி ராஜகுமாரிக்கு கடந்த 18 ஆம் தேதி அதே பகுதியிலுள்ள மேல் சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையின் நிலை மோசமாக இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு குழந்தை இங்பேடரில் வைத்து காப்பற்றபட்டு தாய் ராஜகுமாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததால் நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என மருத்துவமனை ஊழியர் மற்றும் பணியாளர்களால் கட்டாயப் படுத்தி மிரட்டி சம்மதிக்க வைத்தாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்து கொண்ட ராஜகுமாரி நினைவு திரும்பாமலேயே இறந்து விட்டார்.
மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சரியான காரணம் சொல்லாமல் அவசர அவசரமாக உடலை எடுத்துச் செல்ல கெடுபிடிகள் செய்துள்ளது.
இதனையடுத்து, இந்த மணரத்திற்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
மேலும், அந்த குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.