ஒரே ஒரு போன் கால்., அமெரிக்க விமான நிலையம் கிளோஸ்.!!

அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் விமானநிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும்., முடிந்தால் பொதுமக்களை காப்பாற்றுமாறும் அலைபேசியில் ஒரு அழைப்பு வந்து பின்னர் அந்த அழைப்பானது துண்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த விமான நிலையத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால் சற்று நிம்மதி அடைந்தனர்.

பின்னர் அதே பாணியில்., வெடிகுண்டு இருப்பதாக அலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த அலைபேசி எண்ணை சோதனை செய்தனர்.

அந்த சோதனையில்., அவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருப்பதை அறிந்த அவர்கள்., இந்திய காவல் துறையினரின் உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்த விசாரணையில்., 1,000 அமெரிக்க டாலர் மதிப்பில் பிட்காயின்களை வாங்கி ஏமாற்றமடைந்த விரக்தியில் காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு அவ்வாறு பேசியதாக தெரிவித்துள்ளார்.

இவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து இவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.