சென்னை மேற்கு முகப்பேரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் +2 மாணவனுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை ஒருவர் மீது, மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை அடுத்த மேற்கு முகப்பேரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு +2 மாணவர்களுக்காக கணினி வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இதில் ஆசிரியையாக பணிபுரிபவர் திவ்யா (40). இவர் வகுப்பில் பயிலும் மாங்காட்டைச் சேர்ந்த+2 மாணவர் ராஜா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தினமும் வகுப்பு நேரத்தில் ஆசிரியை திவ்யா, மாணவனிடம் தவறாக பேசி உள்ளார்.
ஆசிரியர்- மாணவர் என்ற உறவைத்தாண்டி ஆசிரியை திவ்யா , மாணவனிடம் தவறாக பேசுவதும் நடப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட +2 படிக்கும் ராஜா என்ற மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதை தொடர்ந்து அவனது பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம், புகார் உண்மை என தெரிந்து கணினி ஆசிரியை திவ்யாவை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில், ஆசிரியை திவ்யா தொடர்ந்து மாணவர் ராஜாவுக்கு செல்போன் மூலம் பேசுவதும், குறுஞ்செய்தி அனுப்புவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆசிரியை திவ்யா தனது மகனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக நொலம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திவ்யா தற்போது கேரளா சென்றுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஒரு பெண் ஆசிரியர், மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.