வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் அப்பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரசாந்த், மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். அவனை தான் திருமணம் செய்துகொள்ள போகிறோம் என எண்ணி அந்த மாணவி பலமுறை பிரசாந்துடன் தனிமையில் இருந்துள்ளார்.
அவர்களின் பழக்கம் எல்லையை தண்டி சென்றுள்ளது. இந்த நிலையில் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். அதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து, மாணவியிடம் விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து பிரசாந்த் மீது காவல்துறையில் புகார் கொடுத்தனர், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரசாந்தை கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு நேர்ந்த அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.