தீபாவளியை முன்னிட்டு, அரசு ஊழியர்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம் வழங்குகின்றனர்.

இந்த நிலையில், அக்டோபர் மாதம் சம்பளமாக இரு மடங்கு சம்பளமாக தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதை கண்டு அரசு ஊழியர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்தனர். தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தியுள்ளனர் என ஊழியர்கள் மகிழ்ந்தனர்.

ஆனால், வங்கியில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை எடுக்க வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என அரசு ஊழியர்கள் புலம்பியபடி தங்களது வேலையை செய்து வருகின்றனர்.