30 இலட்சம் லட்டுகள் மாயம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று ஏழுமலையானை வணங்குகின்றனர். அங்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. பலர் இந்த பிரசாதத்தை வாங்குவதற்காகவே திருப்பதி செல்கின்றனர். அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த நிலையில் திருப்பதி கோயிலில் 16 இலட்சம் லட்டு மாயமானது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் 18 ஆம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்களின் வசதிக்காக தினமும் 7 லட்சம் லட்டுகள் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. ஆனால், பிரமோற்சவம் முடிந்த நிலையில் அதிகாரிங்கள் சோதனை நடத்தினர் . அப்போது 16 லட்சம் லட்டுகள் மாயமானதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் இதை தொடர்ந்து விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.விசாரணையில், லட்டு கவுன்டர்களில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்கள் 100 பேர் லட்டு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக 30 பேர் மீது காவல்துறைவழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.