சந்திரிகாவின் ஆரூடம்!

மைத்திரி – மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடித்துக் கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றம் குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் சந்திரிகா அம்மையாளர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை.

ரணிலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அவர் களமிறங்கியிருந்தாலும் தற்போது பின்வாங்கியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே, “மைத்திரி – மஹிந்த கூட்டணி அமைத்துள்ள புதிய அரசானது விரைவில் கவிழும்.

அக்கூட்டணியால் முன்நோக்கி செல்லமுடியாது. ரணிலை நீக்கி விட்டு மஹிந்தவை பிரதமராக நியமித்தமை ஜனநாயக விரோதம்.

இதற்கான பிரதிபலனை மைத்திரி நிச்சயம் அனுபவிப்பார்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.