மரக்கறி வாங்க வந்த நபர்கள் உரிமையாளருக்கு கொடுத்த அதிர்ச்சி!

இங்கிரிய – ஊருகல பிரதேசத்தில் போலியான நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மரக்கறி மற்றும் பழவகைகளை வாங்கியுள்ள குறித்த சந்தேகநபர்கள் போலியான ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை வழங்கியுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் சந்தேகமுற்ற விற்பனை நிலைய உரிமையாளர் சம்பவம் தொடர்பில் இங்கிரிய காவற்துறைக்கு அழைத்து அறிவித்துள்ளார்.

அதன்படி , குறித்த சந்தேகநபர்கள் சிற்றூர்ந்தொன்றில் தப்பிச் செல்ல முயற்சித்த போது இங்கிரிய – பொரலுகொட பிரதேசத்தில் வைத்து காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து ஆயிரம் ருபாய் போலி நாணயத்தாள்கள் 13 இதன் போது மீட்கப்பட்டுள்ளதாக இங்கிரிய காவற்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.