படுதோல்வியடைந்த பா.ஜ.க..! காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி.!!

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் அவர் ராம நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தொகுதி காங்கிரஸ் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சித்து நியாமகவுடா விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து கர்நாடக சட்டசபையில் ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய இரு தொகுதிகள் காலியாக இருக்கின்றன.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எடியூரப்பா, ஸ்ரீராமுலு, புட்டராஜூ ஆகிய மூவரும் எம்.பி.க்களாக இருந்த நிலையில் அவர்கள் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து கர்நாடகத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் காலியான.

இந்நிலையில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன. அதன் படி இடைத்தேர்தல் முடிவு பெற்று இன்று வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது.

தற்போது வாக்குச்சாவடி மையங்களில் காலை 8 மணிமுதல் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடந்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் முன்னிலை வகிக்கிறது.

அந்த வகையில் அனிதா குமாரசாமி ராம்நகர் சட்டசபை தொகுதியில் 47000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்., மண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த வேட்பாளர் சிவராமகவுடா ஒரு இலட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நியமேகவுடா 26000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பெல்லாரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா ஒரு இலட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.