சபரிமலையில் மீண்டும் பதற்றம்! பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சி!!

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் கேரளா மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், இதனால் சபரிமலையில் போராட்டக்காரர்களை அடக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவிட்டதால் சில பெண்கள் கோவிலுக்கு வர தொடங்கினார்கள்.

ஆனாலும் சபரிமலைக்கு சென்ற பல பெண்களை போராட்டம் செய்பவர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அதன்பின் போலீசார் அவர்களிடம் பேசி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் ஐப்பசி மாதம் பூஜை நிறைவடைந்து பூட்டப்பட்ட கோவில், நேற்று மாலை 5.30 மணிக்கு மறுபடியும் மீண்டும் பூஜைக்காக போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.

இதற்கு முன்னர் ஐப்பசி மாதம் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக போலீசார் நடத்திய தடியடி சபரிமலை பக்தர்களிடையே பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இத்தனை மீண்டும் அது போன்ற சூழல் போன்ற உருவாக கூடாது என்பதற்காக நிலக்கல், சன்னிதானம், பம்பை, பத்தினம் திட்டா, உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத வகையில் சபரிமலையில் பெண் காவலா்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சபரி திறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அஞ்சு என்ற 30 வயது பெண் ஒருவா் தனது கணவா், இரண்டு குழந்தைகளுடன், கோவிலுக்குள் செல்ல பம்பைக்கு வந்துள்ளார். இதனால் தற்போது மீண்டும் பதற்றம் சூழ்நிலை ஏற்படாத வகையில், போலீசார் அந்த பெண்ணை பம்பை காவல்துறையில் குடும்ப உறுப்பினர்களுடன் வைத்துள்ளனர்.

இது போன்று சில பெண்கள் வருவார்கள் என்பதால் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.