கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் மீடு ஹேஷ்டாக் மூலம் பெண்கள் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இணைய உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் கூகுள் நிறுவனத்திலும் மீடு சர்ச்சை எதிரொலித்தது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை தெரிவித்து நிறுவனத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கடந்த அக்டொபர் மாதம், பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 13 மேலாளர்கள் உள்பட 48 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி உத்தரவிட்டார்
ஆனாலும் உயரதிகாரிகள் மீதான பாலியல் புகார்களின் மீது கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கூகுளில் பணிபுரியும் பெண்கள் நியூயார்க், டோக்யோ, சான் ஃபிரான்சிஸ்கோ, ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்கள் என உலகின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 1000 ஊழியர்களுக்கு மேல் ஒரே நாளில் விடுப்பு எடுத்தனர். அவர்கள் தெரிவிக்கையில் பணிநீக்கம் செய்வது போல பாலியல் புகாரில் சிக்கியவர்களை கூகுள் நிறுவனம் காப்பாற்றப் பார்க்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது மற்ற ஊழியர்கள் இணைந்து குரல் கொடுப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.” அதை நானும் வரவேற்கிறேன் என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில்: கூகுள் நிறுவனம் அனைவரும் ஒரே மாதிரியான முடிவுகளை எடுக்க முடியாது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தேவையானதை செய்து வருகிறோம். மற்ற நிறுவனங்களை போல வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யும் முறைகளை ஏற்படுத்தமுடியாது. இந்த நிறுவனத்தின் பாஸ் நான்தான், இப்போது உங்கள் உயர் அதிகாரி என்பதை நீங்கள் புரிந்து நடக்க வேண்டும் என்று அனைவரிடம் தெரிவித்துள்ளார்.