அனிதா குமாரசாமி வெற்றி.! பா.ஜ.க விற்கு பெரும் பின்னடைவு.!!

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் அவர் ராம நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தொகுதி காங்கிரஸ் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சித்து நியாமகவுடா விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து கர்நாடக சட்டசபையில் ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய இரு தொகுதிகள் காலியாக இருக்கின்றன.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எடியூரப்பா, ஸ்ரீராமுலு, புட்டராஜூ ஆகிய மூவரும் எம்.பி.க்களாக இருந்த நிலையில் அவர்கள் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து கர்நாடகத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் காலியான.

இந்நிலையில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன.

ஜனதா தளம்(எஸ்) சார்பில் ராமநகரில் முதல்வர் குமாரசாமியின் முதல் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் எல்.சந்திரசேகர் போட்டியிட்டார்.

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான சி.எம்.லிங்கப்பாவின் மகனான சந்திரசேகர், கடந்த அக்டோபர் 10-ம் தேதி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு அனிதா குமாரசாமியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் பாஜக வேட்பாளர் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியுள்ளார். இது கர்நாடக பாஜகவுக்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் மீண்டும் காங்கிரஸ் திரும்புவதாகவும் அறிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட சந்திரசேகருக்கு வாய்ப்பு வழங்கியதில் மூத்த பாஜக நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லை என்றும், முன்னாள் பாஜக அமைச்சர் சி.பி.யோகேஸ்வர் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்ததாகவும் ஆனால் ஒரு பாஜக தலைவர் கூட தொகுதிப் பக்கம் வரவில்லை எனவும் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மூன்றாம் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் நவ.6-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் பாஜக வேட்பாளர் இல்லாமலும், கூட்டணி கட்சி தலைவரின் கட்சி வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்வதிலும் காங்கிரஸ் பாஜகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தற்போது வாக்குச்சாவடி மையங்களில் காலை 8 மணிமுதல் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடந்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் முன்னிலை வகிக்கிறது.

அந்த வகையில் அனிதா குமாரசாமி ராம்நகர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.