பிரித்தானியாவில் தனது காதலியின் மகளை திருமணம் செய்து கொண்ட 47 வயது நபர் தற்போது தனது மனைவி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக உள்ள நிலையில் Channel 5 தொலைக்காட்சிக்கு தங்களது வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளனர்.
Andy – க்கு 47 வயது இருக்கையில் Beth என்ற 16 வயது பெண்ணின் தாயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் குடும்பத்தில் நெருங்கி பழகிய Andy யின் மீது நாளடைவில் 16 வயதான Beth காதல் வயப்பட்டுள்ளார்.
இவருக்குமான வயது வித்தியாசம் 36 ஆகும். Beth மகள் போன்றவள் ஆவாள். அவள் தனது மனதில் உள்ள ஆசையை சொன்னவுடன் எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. நான் முதலில் நினைத்தது எங்களது வயது வித்தியாசம் தான்.
ஆனால், Beth அது பற்றி நினைக்கவில்லை, அவளுக்கு தேவைப்பட்டது ஒரு சந்தோஷமான குடும்ப வாழ்க்கை. எனக்கும் அவளை பிடித்துப்போனது, ஆனால் இந்த உலகம் என்ன கூறுமோ என்று அச்சப்பட்டேன்.
நான் நினைத்தது போலவே, இந்த உலகம் எங்களை தவறாக பேச ஆரம்பித்தது, என்னை paedo என அழைத்தார்கள், அதாவது நெருங்கிய பாலியல் உறவை விரும்புவன். எங்களது உறவினர்கள் எங்களை கொச்சைப்படுத்தினார்கள்.
இதனால், நாங்கள் இருவரும் எங்கள் உறவுகளை விட்டு வெளியேறி கடந்த 2016 ஆம் ஆண்டு சில நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம். இரண்டு ஆண்டு திருமண வாழ்க்கையில் எங்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர்.
தற்போது, வயது வித்தியாசம் எதுவும் எங்களுக்குள் பெரிதாக தெரியவில்லை. எங்கள் இருவருக்கும் குடும்ப உறவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது எங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துவிட்டோம் என பகிர்ந்துள்ளனர்.