தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது 25 வயது வரை தற்கொலை எண்ணம் தன்னை வாட்டியதாக தெரிவித்துள்ளார்.

இந்திய திரைத்துறையில் ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது வாழ்வில் ஏற்பட்ட கடினமான நிகழ்வுகளை தன் சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தன்னை தற்கொலை எண்ணம் வாட்டியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘எனது 25 வயது வரை தற்கொலை எண்ணம் எழுந்ததுண்டு. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம்.

நான் என் தந்தையை இழந்ததால் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன். அதன் பின் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. அவை எல்லாமும் செயலற்று போனதாக இருந்தது.

என் தந்தையும் இறந்து விட்டதால், நான் அதிக திரைப்படங்களை ஏற்கவில்லை. எனக்கு 35 திரைப்படங்கள் கிடைத்தது. அவற்றில் நான் இரண்டை மட்டுமே தேர்வு செய்தேன்.

இந்த எண்ணம் ஒரு விதத்தில் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தியது. மரணம் அனைவருக்கும் நிரந்தரமான ஒன்று. எல்லாவற்றுக்கும் முடிவு காலம் இருக்கும்போது, ஏன் பயம் கொள்ள வேண்டும்? என தெரிவித்துள்ளார்.