இலங்கையில் ஜனநாயக கலாசாரம் மற்றும் நடைமுறைகளை பாதுகாக்குமாறும், அவற்றை பின்பற்றுமாறும் பொதுநலவாயத்தின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த அறிவிப்பு தொடர்பாக, பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பட்ரிசீயா ஸ்கொட்லான்ட்டின் பேச்சாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,பாராளுமன்றத்தை வரும் 14-ஆம் தேதி கூட்டும் ஜனாதிபதியின் அறிவிப்பை பொதுநலவாயத்தின் செயலாளர் கவனத்திலெடுத்துள்ளார் .
மேலும், அரசமைப்பின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு நாடாளுமன்றம் விரைவில் கூடும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் தலைவர்களையும் மக்களையும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டுள்ள செயலாளர் நாயகம், நாட்டின் அரசமைப்பும் சட்டத்தின் ஆட்சியும் மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.