யாழ்ப்பாணத்தில் பாரிய ஹோட்டல்களின் உரிமையாளர்கள் 7 பேருக்கு நேற்றைய தினம் 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த உரிமையாளர்களின் 7 ஹோட்டல்களுக்கு சீல் வைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி எஸ்.சதீஸ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொது சுகாதார ஆய்வாளர்கள் குழுவினால் யாழ்ப்பாணம், குருநகர் மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய ஹோட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அங்கு மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் வழங்கப்படுவதினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஹோட்டல் உரிமையாளர்கள் 7 பேருக்கும் இதற்கு முன்னர் 4 முறை சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், குறித்த 7 பேரின் முன்னைய தவறுகளை வெளிப்படுத்திய நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.