கணவனை கொடூர கொலை செய்த மனைவி.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் தகாணுவை சார்ந்தவர் உமேஷ் பாரி (35). இவரது மனைவியின் பெயர் சில்பா (30). இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உமேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

இதன் காரணமாக அவர் தினமும் பணியை முடித்து மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்., கடந்த 2 ம் தேதியன்று உமேஷ்., வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் வழங்கினர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உமேஷின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து அவரின் மனைவியான சில்பாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில்., சம்பவத்தன்று அதிக மதுபோதையில் வந்த கணவர் அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரத்தில் கயிற்றை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்த்தனர்.