திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை அதிமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழாவில், கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி பரிசுகளை வாங்குவதற்கு காத்து கொண்டிருந்தனர். பின்னர் ஒவ்வொருவரையும் அழைத்து ஒரு பையில் பிரியாணி அரிசியையும் நெய் பாக்கெட்டை வழங்கியும், உயிருடன் ஒரு கோழியையும் அதனுடன் மசாலா பொருட்களையும் பிரியாணி சமைப்பதற்காக வழங்கியுள்ளார்.
இது போன்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என வந்த 5000 பேருக்கும் கறிக்கோழிகளை வழங்கினார். அதனுடன் காலம் நேரம் பார்க்காமல் கட்சிக்காக உழைக்கவேண்டும் என்பதற்காக ஆளுக்கொரு கடிகாரம் ஒன்றையும் வழங்கினார்.
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே இது வரவேற்பை பெற்ற நிலையில், அவர்கள் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், தீபாவளிக்கு வழக்கம் போல பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ் வழங்குவதை தவிர்த்து, இவ்வாறு வழங்கியது இது ஒரு வித்தியாசமான முயற்சி என்றும் தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ-க்கள் பெரும்பாலும் எந்த தொகுதிக்கும் மக்களையும் தொண்டர்களையும் சந்திக்க செல்லாத போது கலசபாக்கம் எம்.எல்.ஏ பன்னீர் செல்வம், தனது வித்தியாசமான முயற்சியால் தனது தொண்டர்களை கவர்ந்துள்ளார்.