பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் உள்ள மகேஷ்கண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார் சவுரசியா. இவர் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிய நிலையில் கட்டிய மனைவியை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் பல நாட்களாக தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை தட்டி கேட்ட இவரது பெற்றோருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் பலமுறை சில நாட்கள் வீட்டிற்கு வராமல் வெளியிலேயே தங்கி விடுவார். இப்படியே பல மாதங்கள் தகராறு ஏற்பட்டும் பிரச்சனையாகவே இருந்தது.
ஆனாலும் சவுரசியா,தனது கெட்ட பழக்கத்திலிருந்து மாறாமல் தொடந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று, சவுரசியா வீட்டிற்கு வந்தவுடன் வழக்கம் போல மீண்டும் தகராறு ஏற்படவே, பின் சவுரசியாவின் பெற்றோர் அவரை பிரம்பால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சவுரசியாவை, ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று பார்க்கும் போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது பற்றி தவலறிந்த போலீசார் தகவலின் பேரில் சவுரசியாவின் பெற்றோரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற மகனை திருத்துவதற்காக பல நாட்கள் போராடி வந்த நிலையில் ஆத்திரத்தில் அடித்ததால் உயிழந்ததில் பெற்றோரை கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.