நமது இல்லங்களில் பெரும்பாலும் அனைவரும் தினமும் கடவுளை வணங்கும் போது நறுமணத்திற்க்காக ஊதுபத்தியை கொளுத்துவது வழக்கம். அந்த வகையில் விதவிதமான நறுமண பத்திகளை கொளுத்தி நமது இல்லங்களில் இருந்து வருகிறோம்.
அந்த ஊதுபத்திகளில் உள்ள இரசாயன பொருட்கள் மூலம் நமது உடல் உறுப்புகளானது பெரும் பாதிப்பை அடைகிறது என்று ஆய்வின் முடிவில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில்., சீன பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்., கொசு பத்தியில் இருந்து வரும் புகையை விட., ஊதுபத்தியானது காற்றுமாசுபாட்டை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நுரையீரலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஊதிபத்திகளை நுகர்வதன் மூலமாக குழந்தைகளுக்கும்., கர்ப்பிணி பெண்களின் கருவுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். நமது கலாச்சாரத்தில் ஊதுபத்தியானது தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுவிட்டது என்றாலும் அதனை முடிந்தளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.
நாம் கடைகளில் எந்த விதமான நறுமண ஊதுபத்திகளை வாங்கி கடவுள்களுக்கு அர்பணித்தாலும்., நமது முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டில் தயாரிக்கப்பட்ட சாம்புராணிகளை பயன்படுத்துவது குழந்தைகளுக்கும் பிறரின் ஆரோக்கியத்திற்கும் நல்ல மருந்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் இந்த இயற்கை சாம்புராணிகளை எப்படி தயாரிப்பது என்பது தெரியாது என்பதே கவலைக்குரியது.