பட்டாசு வெடித்ததற்காக சிறுவர்கள் உள்பட 90 பேர் கைது!

தீபஒளி பண்டிகைக்காக பட்டாசுகள் வெடிக்கப்படும் நேரமாக தமிழகத்தில் காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும்., மாலையில் 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் படி தமிழகத்தில் பட்டாசுகள் வெடிக்க வழங்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும்., மாறாக பட்டாசுகளை அனுமதிக்காத நேரத்தில் வெடித்தால் எந்த வித நிபந்தனையும் இன்றி கைது செய்யப்பட்டு 6 மாத காலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அறிவிப்பை வெளியிடப்பட்டது.

இந்நிலையில்., திருநெல்வேலியில் உள்ள பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரத்தில் பட்டாசுகளை வெடித்ததால் 6 நபர்கள் கைது மற்றும் 7 சிறுவர்கள் நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து மேலும் கோவையில் விதிமுறை மீறி பட்டாசு வெடித்ததாக சுமார் 42 நபர்கள் மீது வழக்குப்பதிவு , திருப்பூரில் 30 நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். இது போன்ற செயலால் பெற்றோர்களிடையே தமிழக அரசின் மீதும், உச்சநீதிமன்றத்தின் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.