இலங்கையில் நீடிக்கும் வேடிக்கை!!

கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கையில் அரசியலில் ஏற்பட்ட திடீர் குழப்பத்தின் காரணமாக ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, அதிபர் சிறிசேனாவின் முன்னிலையில் ராஜபக்சே இலங்கை பிரதமராக பதவியேற்றார்.

அதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில், நாடாளுமன்றத்தை வரும் 16 ம் தேதி வரை அதிபர் சிறிசேனா முடக்கி உத்தரவிட்டார். இந்நிலையில் ரணில்விக்ரசிங்கே ஆதரவாளர்கள், ராஜபக்சே பிரதமர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் சபாநாயகர் கேட்டு கொண்டதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன் நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கினார்.

இதற்கிடையில், நேற்று சபாநாயகர் ஜெயசூர்யா அதிபர் சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “ராஜபக்சே பெரும்பான்மையை நிருபிக்கும் வரையில் ரணில்தான் பிரதமர். அரசியல் சூழ்ச்சியில் ராஜபக்சே பிரதமர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றும், நாடாளுமன்றத்தை கூட்ட தேதியை மாற்றி அறிவித்தது ஏன்” என்று எழுதியிருந்தார்.

இதனால் ஏற்பட்ட காட்டம் காரணமாக, பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே, ஏற்கனவே சபாநாயகராக இருக்கும் கரு.ஜெயசூர்யா பதவியில் இருக்கும் போதே அவருடைய கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தனேவை சபாநாயகராக நியமித்து உத்தரவிட்டார். இதனால் இலங்கையில் ஏறகனவே இரண்டு பிரதமர்கள் இருக்கும் நிலையில் தற்போது இரண்டு சபாநாயகர்கள் பதவியில் உள்ளார்கள்.

இதனால், ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ்குணவர்தனே புதிய அதாவது இரண்டாவது சபாநாயகராக பதவியேற்றுள்ளார்.

இலங்கை அரசியலில் மேலும் குழப்பநிலை நீடித்து கொண்டே செல்வதால் இலங்கை மக்கள் மற்றும் தமிழர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.