78 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயங்கரவாதிகளால் கடத்தல்.!!

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கேமரூன் நாட்டில் உள்ள ஒரு பகுதிக்கு தனி நாடக அறிவிக்ககோரி அங்குள்ள பயங்கரவாதிகளான ஆங்கிலோபோன் என்ற பயங்கரவாதிகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்., கேமரூன் நாட்டில் உள்ள பமென்டோ பகுதியில் உள்ள கிராம பள்ளிக்கூடத்திற்குள் அதிரடியாக ஆங்கிலோபோன் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். பள்ளியில் நுழைந்த அவர்கள் துப்பாக்கி முறையில் அங்குள்ள சுமார் 78 மாணவர்களையும்., அப்பள்ளி ஆசிரியர்களையும் கடத்தி சென்றனர்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவலை அறிந்ததும் காவல் துறையினர் மற்றும் இராணுவப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆங்கிலோபோன் பயங்கரவாத அமைப்பினர் தற்போது வரை அரசிடம் எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை மற்றும் கடத்தப்பட்டவர்கள் எந்த நிலையில் உள்ளனர் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.