ஒரு எம்எல்ஏ-க்கு இத்தனை கோடி பேரம்!

கர்நாடகத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் காலியாக இருந்த, சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடை பெற்று வந்தது.

அந்த வகையில் அனிதா குமாரசாமி ராம்நகர் சட்டசபை தொகுதியில் 47000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்., மண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த வேட்பாளர் சிவராமகவுடா 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நியமேகவுடா 26000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பெல்லாரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சத்து 43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனால் காங்கிரஸ் கட்சி 2 பாராளுமன்ற தொகுதிகளில் மற்றும் 2 சட்ட மன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் எடியூரப்பா மகன் சிவமோகா தொகுதியில் 52,148 ஆயிரம் வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார்

இந்நிலையில் கர்நாடக மாநில இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் கர்நாடக முதலமைச்சர் H.D.குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி – காங்கிரஸ் கூட்டணி என்பது அசுத்தமான கூட்டணி அல்ல, இறைவனின் ஆசீர்வாதத்தை பெற்றிருக்கின்ற கூட்டணியாகும் எனவும், அதனை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்துக் காட்டி இருப்பதாக கூறினார். மேலும் அவர் ” காங்கிரஸ் கட்சி மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களை, அவர்கள் பக்கம் இழுப்பதற்கு ஒரு எம்எல்ஏ-க்கு 30 கோடி முதல் 35 கோடி ரூபாய் வரை பாஜக பேரம் நடந்ததாகவும், யார் பக்கம் மக்கள் உள்ளார்கள் என்பது எங்கள் எம்எல்ஏக்களுக்கு உணர்ந்துள்ளதாகவும்” என்று கூறினார்.