“குழந்தைகளை கடத்துபவர்களையும், அவர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என பிரபல நடிகர் ரஜினிகாந்த் “,
”
குழந்தைகளை கடத்துபவர்களையும், அவர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என பிரபல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஜினிகாந்த அளித்த பேட்டியில், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவர் உச்சத்தில் இருப்பார்கள்.
எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றார்.
மேலும், கடத்தப்படும் குழந்தைகளை பார்த்தால் அதிக எமோஷன் ஆகும். கடத்தப்பட்ட குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்க வைப்பதை பார்த்தால் கோபம் வரும் என்றவர் குழந்தைகளை கடத்துபவர்களையும், அவர்களை வைத்து தொழில்செய்து பிழைப்பு நடத்துபவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.