துப்பாக்கி, வாள்களுடன் சந்தேக நபர் கைது!

மதுகம – யடதொலவத்த பிரதேசத்தில் நபரொருவரை கொலைச் செய்த சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த நபரொருவர் நேற்று  இரவு 8.30 மணியளவில் களுத்துறை சட்ட அமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் தொடங்கொட பகுதியில் வைத்து துப்பாக்கிகள் மற்றும் வாள்கள் சகிதம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வருடம் ஜனவரி 6 ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைக்கலப்பில் மதுகம யடதொலவத்த பகுதியில் வைத்து ஆணொருவரை தாக்கி கொலைச் செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்த சந்தேகநபரொருவர் நேற்று  இரவு 8.30 மணியளவில் தொடங்கொட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து கைத்துப்பாக்கிகள் இரண்டும் மற்றும் வாள்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளது.