இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் சர்கார். இந்த திரைப்படத்தில் நடிகர் கீர்த்தி சுரேஷ்., வரலட்சுமி சரத்குமார்., பழ.கருப்பையா., ராதாரவி மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் மற்றும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது.
தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படமானது உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அரசியலை மையமாக வைத்து இந்த திரைப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது என்பது சர்கார் திரைப்படத்தின் கதை வழக்கில் தெரியவந்தது.
படித்ததில் பிடித்தது.
கதையை திருடுறதுன்னு முடிவு
பண்ணிட்டா
நல்ல கதையா திருடுங்கடா— H Raja (@HRajaBJP) November 7, 2018
இந்த நிலையில்., எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “படித்ததில் பிடித்தது: கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரப்பையும் ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.