வேலூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வெண்கவேடு ஊராட்சிக்குட்பட்ட துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் கீர்த்திகா (வயது 22). அதே பகுதியை சார்ந்தவர் கதிர்வேலன் (வயது 26) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரும் கீர்த்திகாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில்., அந்த வாலிபருக்கு அவருடைய உறவினரின் பெண்ணுக்கு திருமணம் முடிக்க, வாலிபரின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்த கீர்த்திகா அந்த வாலிபருக்கு பலமுறை அலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.
அந்த வாலிபர் இவரின் அழைப்புக்கு பதில் ஏதும் கூறாததால்., ஆத்திரமடைந்த அவர் மனவேதனையுடன் அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்று இவர்களின் காதலை கூறியுள்ளார். அப்போது அந்த வாலிபர் கீர்த்திகாவை திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் கடும் மனஉளைச்சலுடன் காணப்பட்ட அவர்., இன்று திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.