படமே பார்க்கவில்லை., ஆனால் நாங்கள் எதிர்ப்போம் – அதிமுக நிர்வாகி..!!

சன் பிக்சர்ஸ் தயாரித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” படம் நேற்று தீபாவளியன்று வெளியானது.

இந்த படம் பல சிக்கலை கடந்து தாண்டி வந்துள்ளது. இப்படம் தீபாவளி அன்று வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு எதிராக அதிமுக கட்சியினர் போர்க்கொடி தூக்கவே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்த படத்திற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் குதிக்க துவங்கினர் மற்றும் திரையரங்கில் வைக்கப்பட்ட பேனர்களை கிழித்து எறிந்தனர்.

திரைப்படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குவதாக திரைபடக்குழுவும்., தயாரிப்பு குழுவும் அறிவித்ததை அடுத்த அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர். பிரச்சனை ஓரளவு முடிந்தது என்று அனைவரும் பெருமூச்சு விடவே., அடுத்த பிரச்சனை தலைதூக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சியில் அதிமுக கட்சியில் உள்ள நிர்மலா பெரியசாமி நேர்காணல் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது., சர்க்கார் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை., மாறாக வெளியான சில சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் விமர்சனங்களை வைத்தே படத்தை எதிர்க்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இது போன்ற காட்சிகள் திரைப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் எதிர்மறையான நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.