தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இன்று ஒரே நாளில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு மாதமாக சென்னையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சலால் கடந்த மாதத்தில் ஒன்றரை மாத குழந்தை பரிதாபமாக பலியானது. இதை தொடர்ந்து, 8 மாத குழந்தை, 2 வயது குழந்தை, 7 வயது குழந்தை என தொடர்ந்து குழந்தைகளை குறி வைத்து டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலியாகினர்.
இந்நிலையில், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மல்லிகா என்ற பெண் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். அதே கோவை மாவட்டம் சூலூரில் புஷ்பா என்ற பெண்ணும், பீளமேட்டில் காயத்ரி என்ற பெண்ணும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், இதே போல் தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இந்த வருடம் மட்டும் பன்றி காய்ச்சலால் 15 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.