நாட்டில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் மாற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்கிரமசிங்க ராஜனாமா செய்ய உத்தேசித்துள்ளதாக கொழும்பு ஐ.தே.கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலின் பதவி விலகலை தொடர்ந்து கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தலைவர் பதவியை ஏற்று கட்சியை வழிப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன.
அம்பாந்தோட்டையை சொந்த இடமாக கொன்ட சஜித் பிரேமதாச முன்னாள் ஐ.தே.கட்சி பிரதமர் பிரேமதாசவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.