3 மாத கரு வயிற்றில் இருக்க கட்டாயப்படுத்தி அரங்கேற்றப்பட்ட அட்டூழியம்..? அப்பா அம்மா இல்லாத பெண்ணுக்கு நடந்த கொடுமை.!

குமரியில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டியதாக, கணவர் மற்றும் உறவினர்கள் மீது இளம்பெண் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவரது தாயார் சிறு வயதில் இறந்ததால், சத்யாவின் தந்தை வேறு திருமணம் செய்து பிரிந்து சென்றார்.

இதையடுத்து தனியாக வாழ்ந்து வந்த சத்யா, நேசமணி நகர்பகுதியை சேர்ந்த விக்ரம் பிள்ளை என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம், கடந்த ஆண்டு, டிசம்பரில் நாகர்கோவிலில் உள்ள ஒரு கோயிலில் நடந்தது.

பணம், நகை வாங்காமல் திருமணம் செய்து கொண்ட விக்ரம்பிள்ளை, சத்யாவிடம் நாளடைவில் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்திகொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

திருமணம் முடிந்து 3 மாத கர்ப்பமாக இருந்த சத்யாவை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

கணவர் மற்றும்உறவினர்களால் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளான சத்யா, நார்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது சட்டபடி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களுடன் வந்து புகார் அளித்தார்.

குழந்தை வயிற்றில் இருந்த பொழுது கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அடித்து துன்புறுத்தியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.