தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ஆண்டிபட்டியில் நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ஆண்டிபட்டி யில்.#AMMK#AUNDIPATTI pic.twitter.com/cORiT1ov54
— S Vijayapandian (@vipana7) November 10, 2018
இதில் கலந்துகொண்டு பேசிய தினகரன், 18 தொகுதிகளில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும். தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை தற்போது ஆட்சி செய்பவர்கள் நிறைவேற்றவில்லை; ஆர்.கே.நகர் தேர்தலை போல, 20 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவும், நாங்கள் யார் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிப்போம். இவ்வாறு தினகரன் பேசினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், முத்தையா, சுந்தரராஜன், ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்ட 12 பேர், நேற்று மதியம் 12.15 மணி 2.10 மணி வரை 2 மணி நேரம் சசிகலாவை கர்நாடக சிறையில் சந்தித்தனர்.
சசிகலாவை சந்தித்த கையேடு தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது ஆளும்கட்சிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று சசிகலாவுடன் நடந்த ஆலோசனைப்படி படிப்படியாக சசிகலாவுக்கு தினகரன் ஷாக் தர உள்ளனர்.