விஜய் ரசிகர்களின் வெறியும்., காமெடியும்.!! வீடியோ தொகுப்பு.!!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான திரைப்படம் சர்கார். இந்த திரைப்படத்தில் அரசு தந்த இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயர் வில்லிக்கு வைக்கப்பட்டதும் பெரும் பிரச்சனையானது.

இந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக வினர் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களை அடித்து நொறுக்கி., திரையரங்கில் காட்சிகளை தடை செய்தனர். இவர்கள் தீபாவளிக்கு மறுநாளான புதன் கிழமை மற்றும் வியாழன் கிழமைகளில் போராட்டத்தில் இறங்கவே., படக்குழு காட்சிகளை நீக்கம் செய்வது குறித்த அறிக்கையை வெளியிட்டவுடன் அமைதியாகினர்.

தற்போது இந்த பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் தமிழக அரசால் வழங்கப்பட்ட மடிக்கணினி., மின்விசிறி மற்றும் மாவட்டும் இயந்திரங்களை தீயில் போட்டு எரிக்கும் விடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அவ்வாறு வெளியான விடியோக்கள் சில உண்மையான வெளிப்பாடையும் சில சிரிப்பையும் வரவழைக்கிறது.

இதுதான் சார்., இந்த ஒரு வீடியோதான் எங்க LIST லேயே இல்ல சார்., நாங்களே SHOCK ஆகிட்டோம். பாவம் அந்த பையனோட அப்பா…