இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் ஜோர்கத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9 நாட்களில் 18 இளம் குழந்தைகள் பலியாகி உள்ளன.
அதுவும் குறிப்பாக பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் குழந்திகள் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தான் உயிரிழந்துள்ளனர். இது அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை சூப்பிரண்டு தேபஜித் குழந்தை உயிரிழப்புகள் மருத்துவமனை அலட்சியத்தால் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகமும் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.
இது குறித்து மருத்துவமனை சார்பில் நிர்வாகி ஒருவர், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிதத்தால் இது போன்ற உயிரிழப்புகள்
ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் எடை குறைவாக பிறந்துள்ளதும் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறினார்.
தொடர்ச்சியாக குழந்தைகள் இறந்தது அந்த மாநிலத்தில் ஒரு பீதியை உருவாக்கியுள்ளது.