1990 காலகட்டங்களில் கதையின் நாயகனாக நடித்து வந்தவர் நடிகர் சரவணன். அதன் பின் பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு சித்தப்பு என்ற கதாபாரத்தில் மீண்டும் களமிறங்கி தற்போது வெளியான கடைக்குட்டி சிங்கம் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகர் சரவணன்.
கடந்த தீபாவளியன்று நடிகர் சரவணனுக்கு சிறய காய்ச்சல் ஏற்படவே சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்கள் அவருக்கு செய்த இரத்த பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதுக்கு உண்டான அறிகுறி தென்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் உடனடியாக சென்னை மியாட் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பன்றி காச்சல் குறித்து அவர் தெரிவிக்கையில், ”எனக்கு பந்திரி காய்ச்சலுக்கு உண்டான ப்ளூ காய்ச்சல் இருப்பதாக மறுத்தவர்கள் கூறினார். தற்போது காய்ச்சல் குறைந்து, உடல்நிலை சீராகி வருகிறது. விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.