அரசியலில் இருந்தே விலகுகிறேன்.! தினகரனின் அறிவிப்பால் திடீர் பரபரப்பு.!

ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி தேனி ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க.வின் சார்பில் அ.ம.மு.க.கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இந்தப்போராட்டத்தில் அக்கட்சியின் தொண்டர்களும் அவருடன் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதத்தினை முடித்து வைத்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில், இந்த உண்ணாவிரதம் ஆட்சியாளர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் எப்பொழுது தேர்தல் வந்தாலும் மாற்றத்தினை கொண்டு வர தயாராகி வருகின்றனர். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அ.ம.மு.க.வில் இருக்கின்றனர். ஆண்டிப்பட்டியில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் ஆர்.கே. நகரில் நிறைவடையும். இரட்டை இலை சின்னம் துரோகிகளிடம் இருக்கிறது. அதனால் மக்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து இருக்கின்றனர்.

ஆர்.கே.நகர் தேர்தலை போல, அ.தி.மு.க. 20 தொகுதி இடைத்தேர்தலிலும் தோல்வியை தழுவும், மக்கள் மன்றத்தில் நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் என்ன தவறு செய்தனர் என்று மக்கள் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பர். அரசு 18 தொகுதிகளில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முன்வர வேண்டும்.

தற்போது ஆட்சி செய்பவர்கள் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியூட்ரினோ திட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சியுடன் ஆயுட்காலம் வரை கூட்டணி இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.