விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் அருகே உள்ள ஊர் முதுகுடி. இந்த ஊரை சார்ந்தவர் சமுத்திரம் (60). இவர் விவசாயியாக பணி செய்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தாருடன் இராசபாளையத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் மாலையில் வீடு திரும்பியவுடன் வீட்டின் காதவானது உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து., வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 16 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக இராசபாளையம் தெற்கு காவல்நிலையத்திற்கு தகவல் வழங்கினர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து வீட்டில் ஆட்கள் இல்லாதிருப்பதை கண்ட கொள்ளையர்கள் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.