வித்தியாசமாக பந்து வீசி அசத்திய இந்தியாவின் இளம் வீரர்! வைரலாகும் வீடியோ!

இந்தியாவில் 23 வயதுக்குட்பட்டோருக்கான சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் பெங்கால் அணியும் உத்திரப்பிரதேச அணியும் மோதியது.

வெஸ்ட் பெங்கால் அணி பேட்டிங் செய்தது. அப்போது உத்திர பிரதேச மாநில அணியைச் சேர்ந்த 19 வயதுடைய இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சிவா சிங், வித்தியாமான முறையில் பந்து வீசினார்.

அதாவது அவர் 360 டிகிரி அளவிற்கு சுற்றி வந்து பந்து வீசினார். இதைக் கண்ட நடுவர் முறையற்ற பந்து(டெட் பால்) என்று அறிவித்தார். இதனையடுத்து நான் போட்டது டெட் பால் இல்லை என நடுவரிடம் முறையிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், நான் ஏற்கனவே இது போன்று பந்து வீசியுள்ளேன். நான் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வித்தியாசமான பாணியில் பந்துவீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இந்தப் போட்டியிலும் இதைச் செய்தேன் என கூறினார்.