பிரேசில் நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் மார்சியா மிராண்டா என்ற இளம் பெண் வசித்து வந்தார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்துவந்தார். கணவர் இல்லை என்றாலும், தன் 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இந்த குழந்தைகளை மிராண்டாவிடம் விட மாமனார் ஒலிவேர (62) , மாமியார் ஐசில்டா (60) ஆகியோருக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் பேரக்குழந்தைகளை தன்னுடன் வைத்துக்கொள்ள மிராண்டாவை கொலை செய்ய திட்டம் தீட்டிய அவர்கள், கடந்த அக்டோபர் 2-ம் தேதி மருமகள் மிராண்டாவை சந்தித்து, “நாங்கள் ஒரு பிளாட் வாங்கி இருக்கிறோம். அந்த நிலத்தை நீ வந்து அதை பார்க்க வேண்டும் என்று கூப்பிட்டார்கள். முதலில் மிராண்டா மறுத்தாலும், 2 பேரும் வற்புறுத்தி கூப்பிடவும் அவர்களுடன் சென்றார்.
சாவ பாலோ என்ற இடத்தில்தான் பிளாட் உள்ளதாக மிராண்டாவை காரில் கூட்டி சென்றார்கள். பிறகுதான் அங்கே தோண்டப்பட்ட குழிக்குள் மிராண்டாவை உயிரோடு தள்ளி கான்கிரீட் போட்டு மூடியும் விட்டார்கள். இதன்பிறகு மிராண்டாவை காணோம் என்று புகார் எழுந்ததையடுத்து தற்போது போலீசார் இதை கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில், மாமனாரும், மாமியாரும், மிராண்டாவை உயிரோடு புதைக்கவே அந்த நிலத்தை விலைக்கு வாங்கியதாக தெரியவந்தது. எப்பவுமே சிரித்த முகத்துடன் இருக்கும் மிராண்டாவின் உடலை உருக்குலைந்து, மிகவும் மோசமான நிலையில்தான் போலீசார் மீட்டார்கள்.